இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அதற்கு மத்திய அரசு தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்தியது. அதில் ஒன்று தான் pm-kisan திட்டம். புதிய வேளாண் சட்டம் அமல்படுத்தப்பட பிறகு விவசாயிகளுக்கு மற்றொரு நல்ல திட்டத்தையும் அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் தொழில் தொடங்குவதற்காக 15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். pm-kisan FPO yojana திட்டத்தின் கீழ் வேளாண் உற்பத்தி மையங்களுக்கு நிதி கிடைக்கும். இதில் பயன்பெற வேண்டுமானால் 11 விவசாயிகள் ஒன்றிணைந்து ஒரு வேளாண் நிறுவனத்தை அமைக்க வேண்டும். இதன்மூலம் விவசாயிகள் விதை, உரம், வேளாண் மருந்துகள், வேளாண் உபகரணங்கள் போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம்.
இதன் மூலமாக இடைத்தரகர்களின் சுரண்டல் தடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் மூன்று வருடங்களுக்கு பல்வேறு தவணைகளாக நிதியுதவி கொடுக்கப்படும். 2024 வருடத்திற்கு மொத்தம் பல கோடி ரூபாய் செலவு செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் நிலையில் இந்த திட்டம் விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.