Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறப்பாக நடைபெற்ற விழா…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. அதிகாரிகளின் தகவல்….!!

கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற பெருவிழாவில் சேர்ந்த காணிக்கை பணத்தை கோவில் அதிகாரிகள் எண்ணி உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற விழாவில் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் நரசிம்மர் சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர். இதனையடுத்து நரசிம்மர் கோவில்களில் இருக்கும் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

பின்னர் கோவில் இணை ஆணையர் ஜெயா, ஆய்வாளர் பிரியா, கண்காணிப்பாளர் விஜயன் மற்றும் சுரேஷ், உதவி ஆணையர் தியாகராஜன் ஆகியோர் இணைந்து காணிக்கை பணத்தை எண்ணியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காணிக்கை பணம் மொத்தமாக 38,63,209 ரூபாய் இருந்துள்ளது. மேலும் 1,310 கிராம் வெள்ளி மற்றும் 105 கிராம் தங்கம் ஆகியவை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |