மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .
மயிலாடுதுறை 2-வது புதுத்தெருவில் மகாகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதன் பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மயிலாடுதுறை அருகில் உள்ள எலந்தங்குடி அண்ணா நகரைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காளிதாசனை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.