வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், பெறாதோர், பிளஸ் 2 படிப்பை முடித்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் 45 வயதுக்குள், இதர வகுப்பினர் 40க்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிப்ரவரி 28 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.