Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.. பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்திருப்பதாக நாட்டின் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் திட்டம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனமானது, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், வேலையின்மை தொடர்பான தரவுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கல்வி கற்றவர்களில் 24% நபர்கள் பணியின்றி தவித்து வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிலை குழுவில் தேசிய வேலைவாய்ப்பின்மைக்கான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளான பெண்களில் 40% பேர் வேலையின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த அறிக்கையில், ஒரு நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் பணிக்கு, சுமார் 15 லட்சம் நபர்கள் போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அரசு சார்பாக எந்தவித ஆய்வும் நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல நிறுவனங்களின் தகவல்களின் படி, அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை 16% இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |