மேற்குவங்க மாநிலம் ஜமல்பூரில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேற்குவங்கம் ஜமல்பூரில் பல இடங்களில் கடுமையான மின்னல் தாக்கியது. அப்போது விவசாயம் செய்து கொண்டிருந்த ஷம்புநாத் பேக் (52), ரஞ்சித் கோயலா (40), ஆதீர் மாலிக் (49), அரூப் பேக் (40) ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து அருகில் வேலை செய்தவர்கள் 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். இதையடுத்து ஜமல்பூர் தொகுதி மேம்பாட்டு அலுவலர் சுபங்கர் மஜும்தார் இறந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.