விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான 10 மாடுகள் அப்பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்துள்ளது.
அப்போது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனையடுத்து திடீரென பாய்ந்த மின்னல் அங்கிருந்த 2 மாடுகளை தாக்கியுள்ளது. அதில் 2 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.