Categories
பல்சுவை

சட்ட மேதை அம்பேத்கரின் சாகாவரிகள்…!!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி பலரது வாழ்க்கையை மாற்றிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் சாகா வரிகள்

  • நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது உன்னைக் கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை.
  • மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்கும் ஆனால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம்
  • வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்
  • தன்னை உயர்ந்தவனாகவும் மற்றோரை தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி.
  • எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனை படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றனோ அவனே சுதந்திர மனிதன்.
  • அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
  • ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

  • எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறானோ யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் புதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்.
  • உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சி ஏற்படுகிறது.
  • மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
  • மகாத்மாக்கள் வந்தார்கள் மகாத்மாக்கள் மறைந்தார்கள் ஆனால் தீண்டாமை இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
  • ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது.
  • கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்குச் செலுத்து அது உனக்கு பயன்தரும்.

Categories

Tech |