நடிகர் விஷ்ணு விஷாலின் ராட்சசன் கெட்டப், அவரது அப்பாவை போன்று இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஸ்ணு விஷால், இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் அதன் பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சசன், ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார்.
இந்த நிலையில் அவர் ரியல் வெர்சஸ் ரீல் எனும் கேப்ஷனுடன் தன்னுடைய அப்பாவின் போட்டோ மற்றும் அவர் நடித்துள்ள ராட்சசன் படத்தில் போட்ட போலீஸ் கெட்டப் போட்டோ இரண்டையும் ஒப்பீடு செய்து டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,
Real vs reel..🙏#mydad #Ratsasan pic.twitter.com/NQYSESfR7x
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) April 25, 2020
அப்படியே அப்பாவை போன்று அச்சு அசலாக ஜெராக்ஸ் போல இருக்கீர்கள் என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வித்தியாசம் என்று சொன்னால் இரண்டிற்கும் இடையே கருப்பு / வெள்ளை நிறம் மட்டும் தான். மத்தப்படி நீங்கள் உங்கள் அப்பாவின் ஜெராக்ஸ் போன்று தான் உள்ளீர்கள்.
உங்கள் அப்பா உங்களை நினைத்து கண்டிப்பாக பெருமை கொள்வார். அது மட்டுமின்றி அடுத்ததாக உங்களது நடிப்பில் வெளிவரவிருக்கும் எஃப்.ஐ.ஆர்., காடன் மற்றும் மோகன் தாஸ் படங்கள் வெற்றிபெறுவதற்கு எங்களது மனம்மார்ந்த வாழ்த்துக்கள் என்று அவரின் ரசிகர்கள் வாழ்த்தியும் உள்ளனர். இவரின் தந்தை ரமேஷ் குடவாலா டிஜிபி ஆக பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.