Categories
Tech டெக்னாலஜி

உங்க ஐபோன் ஒரிஜினல்னு கண்டுபிடிப்பது எப்படி?….இதோ சில டிப்ஸ்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

நீங்கள் வாங்கக்கூடிய ஐபோன் உண்மையானது தானா? (அ) போலியான ஐபோனாக இருப்பின் கண்டுபிடிப்பது எப்படி..? என்பதை நாம் தெரிந்துக்கொள்வோம். உண்மையான ஐபோன் எப்போதும் பிரகாசமாக மற்றும் பளபளப்பாக இருக்கும். அதன் மேற்புற அமைப்புகள் அனைத்தும் குவாலிட்டி ஆக இருக்கும். இந்த அடையாளம் கூட ஐபோனை மற்ற மொபைல்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அதுமட்டுமின்றி ஐபோன் கேபிள் தரமாகவும், சன்னமாகவும் இருக்கும்.

உண்மையான ஐபோன் கேபிளை பார்த்தவர்கள் போலி கேபிளை ஈஸியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ஐபோன் மேற்புற விளிம்புகளை உருவாக்குவது மிக கடினம். ஐபோன் போன்று போலிகளை உருவாக்குபவர்களால் ஐபோன் மொபைலில் உள்ள மேற்புற விளிம்புகளை அப்படியே கொடுக்க இயலாது. ஐபோன் பில்ட் குவாலிட்டியை நீங்கள் சரி பார்த்தால், கண்டிப்பாக போலி ஐபோன்களை எளிமையாக கண்டுபிடித்து விடலாம்..

Categories

Tech |