Categories
இந்திய சினிமா சினிமா

உங்கள சந்திக்கல…! “இது என் சொந்த இழப்பு”…. சாய்பல்லவி உருக்கம்..!!

நடிகை சாய் பழல்வி, இர்பான்கானின் மறைவிற்கு, நான் அவரை சந்தித்தது இல்லை, ஆனாலும் சொந்த இழப்பு போன்று உள்ளது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்த பிரபலமான நடிகர் தான் இர்பான்கான். அவர் நேற்று அவரின் உடல்நிலை மோசமானது,  தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருடைய வயது 53 ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே புற்றுநோயுடன் போராடி கொண்டிருந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்நோய்க்கு லண்டனில் சிகிக்சை பெற்று இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கும் மிகவும் உடல்நிலை மோசமானது, உடனேயே அவரை மும்பையில் இருக்கும் கோகிலா பென் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார். அவரது மறைவிற்கு பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சாய்பல்லவி டுவிட்டரில் கூறியதாவது; 

“நான் உங்களை நேரில் சந்தித்தது கூட இல்லை சார். ஆனால் இந்த இழப்பு எனது சொந்த இழப்பாக உணர்கிறேன். உங்கள் நடிப்பு மற்றும் சினிமா மீதான காதல் உங்களை எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவராக ஆக்கியுள்ளது. உங்கள் ஆன்மா இன்னும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான இடத்தில் இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |