Categories
சினிமா

உங்களுக்கு கவலை இருக்கா இதை மட்டும் பண்ணுங்க – இலியானா அறிவுரை ….!!

கவலையிலிருந்து மீள்வதற்கான வழியை நடிகை இலியானா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை இலியானா தமிழ் மொழியில் நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.அவர் தற்போது இணையதளத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் சில நேரங்களில் எனக்கு மிகுந்த வருத்தமும், கவலையும் ஏற்படும். அத்தகைய நேரத்தில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் எல்லாமே நொடிப்பொழுதில் மறைந்து விடும் என்றும் இத்தகைய முறையை அனைவரும் பின்பற்றினால் கவலைகளிலிருந்து விடுபட முடியும் ஒவ்வொரு நாளும் புதிய உடற்பயிற்சிகளை நான் செய்கிறேன். அதுமட்டுமன்றி ஆன்லைனில் பார்த்தும்கூட உடற்பயிற்சிகளை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

உடற்பயிற்சி செய்யும்போது லட்சிய பாதையை நோக்கி செல்வதாகவே எண்ணம் தோன்றும். சில நாட்களுக்கு முன் நான் குண்டாக மாறி விட்டேன் என்ற விமர்சனம் வந்தது. அந்நிலையில் வெவ்வேறான புதிய உடற்பயிற்சிகளை தீவிரமாக செய்து பழைய நிலைக்கே உடம்பை குறைத்தேன் நான் அனைத்து நாட்களும் வெவ்வேறான உடற்பயிற்சி முறையை பின்பற்றுகிறேன். ஒருநாள் 75 நிமிடம் , 2 மணிநேரம், 45 நிமிடம் போன்ற பல்வேறு நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.இப்பயிற்சி செய்வதால் உடலை கட்டுக்கோப்பான நிலையிலும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும் என கூறியுள்ளார். ரசிகர்கள் அனைவரும் இப்பயிற்சியை ஒரு முறை செய்து பாருங்கள் அது தங்களுக்கு எத்தகைய சந்தோசத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்களே உணர்வீர்கள் என்று இலியானா கூறியுள்ளார்.

Categories

Tech |