தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு நூதன முறையில் நகைகளைத் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வில்லிசேரி இந்திரா நகர் பகுதியில் தங்கமாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முருகலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி தனது வீட்டின் முன் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது முருக லட்சுமியிடம் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம் என்பவர் சாமியார் வேடம் அணிந்து கொண்டு சென்று அவரிடம் உங்களுக்கு இப்போது நேரம் சரி இல்லாததால் பல்வேறு துன்பங்கள் வந்து சேரும் என்று கூறியுள்ளார். அதற்கு முத்துலட்சுமி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது அதற்கு பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு முத்துலட்சுமி என்ன பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று முத்துராமலிங்கத்திடம் கேட்டபோது தங்களிடம் உள்ள தங்க நகைகளை மூலிகை தண்ணீரில் போட்டு சில நாட்கள் பூஜை செய்து வந்தால் உங்களுக்கு துன்பம் ஒன்றும் வராது என்று தெரிவித்துள்ளார். இதனை பொய் என்று அறியாத முருகலட்சுமி அவரிடம் இருந்த 5 பவுன் தங்க நகைகளை முத்துராமலிங்கத்திடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து முத்துராமலிங்கம் ஒரு டம்ளரில் மூலிகை தண்ணீரை ஊற்றி அதில் தங்க நகைகளை எல்லாம் போட்டு மூடி இதனை சில நாட்களுக்கு சாமி அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றும், இடையில் இதை திறக்க கூடாது என்றும் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இந்நிலையில் முருகலட்சுமி முத்துராமலிங்கம் சொல்லியபடியே செய்து பூஜை அறையில் இருந்த டம்ளரை எடுத்து திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போதுதான் முருக லட்சுமிக்கு தெரிந்தது அவர் ஏமாற்றிவிட்டு தங்க நகையை திருடிச் சென்றது தெரிந்தது. இதனையடுத்து முருகலட்சுமி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துராமலிங்கம் தான் பல்வேறு இடங்களில் தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு நூதன முறையில் திருடுகிறார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முத்துராமலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மீட்டுள்ளனர்.