வங்கி தகவல்களை திருட கூடிய 7 ஆபத்தான செயலிகளை நீக்குமாறு இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.
தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. உலகத்தையே உள்ளங்கையில் அடக்கி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வசதி மொபைலில் உள்ளது. இதற்கு நாம் பல விதமான செயலிகளை பயன்படுத்துகிறோம். சிலர் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு செயலிகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள். இதில் ஒருசில செயலிகளை அவ்வப்போது பாதுகாப்பு கருதி தற்காலிகமாக பயன்படுத்துவதை தவிருங்கள் என்பது உள்ளிட்ட எச்சரிக்கைகள் வரும்.
அந்த வகையில், இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று, பிரபலமான 7 ஸ்மார்ட்போன் செயலிகள் ஜோக்கர் என்னும் வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி மூலம் பயனாளர்களின் வங்கி தகவல்களை ஜோக்கர் வைரஸ் திருடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பு கருதி ஏழு செயலிகளையும் தற்காலிகமாக மொபைலில் இருந்து நீக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகளின் பெயர்கள் பின்வருமாறு, safety applock , convenient, scanner 2, push message – texting & sms, emoji wallpaper, separate doc scanner, fingertip gamebox ஆகியவை ஆகும்.