Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : அதிமுகவை பின்னுக்கு தள்ளிய திமுக.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது.

வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான போட்டியில் முன்னிலை வகித்து வந்த அதிமுக தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை…

முன்னிலை நிலவரம்..!

ஒன்றிய கவுன்சிலர் – 297 /5067

அதிமுக+ – 180

திமுக+ – 182

அமமுக – 8

பிற கட்சிகள் -5

Categories

Tech |