தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உணவு மானியம் ரூ.2,069 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் காணொலி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கோரிக்கை வைத்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழக அரசி இணைத்துள்ளது என்றும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த உபகரணங்களை வாங்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் மே 20ம் தேதி வரை 1.34 லட்சம் பேர் 92 ரயில்கள் மூலம் வெளி மாநிலம் சென்றுள்ளனர். அதேபோல, தமிழகத்தில் உள்ள சுமார் 4 லட்சம் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.