Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்கள் தங்களது அடையாள போராட்டத்தை கைவிட வேண்டும்: அமித்ஷா வேண்டுகோள்..!

மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என வாக்களித்தார். அதேபோல, மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3,869 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

இருப்பினும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய மறுப்புகளும் தெரிவிக்கப்பட்டது. இதை நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு, சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இன்று மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்குமாறு டாக்டர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டது.

” ஒயிட் அலர்ட் ” என்ற அடையாள போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று அனைத்து மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் உள்துறை அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அடையாள போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |