Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: தொண்டர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா..!!

தேர்தல் பரப்புரையை முடித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தொண்டர் வீட்டில் உணவருந்தினார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதனால் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் வேலைகளில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின்னர், பாஜக தொண்டர் ஒருவரது வீட்டில் உணவருந்தினார். அப்போது டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியும் உணவருந்தினார்.

Categories

Tech |