தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டும் படி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
#update: Hon’ble @drharshvardhan Ji spoke over phone,asked d current situation of #Covid_19 in TN,he appreciated the efforts of #TNHealth in the containment & the efforts of our Hon’ble CM @CMOTamilNadu to keep the situation well under control. He assured the govt’s support to TN
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 30, 2020