தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்கும்படி மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்து வருகின்றது.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HBL ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தை தமிழக அரசு குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.