தம்மை இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடந்தும் நடவடிக்கைக்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016ம் ஆண்டு தப்பி சென்றார்.
அவரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜய் மல்லையா கடன்களை திருப்பி செலுத்ததற்கான ஆதாரங்கள் சரியாக உள்ளதால் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை என கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிரித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கோரி விஜய் மல்லையா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், விஜய் மல்லையா மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பல நாட்கள் நிலுவையில் இருந்த இந்த மனுவை பிரிட்டன் (லண்டன் நீதிமன்றம்) இன்று தள்ளுபடி செய்தது.