இந்தியாவில் வேகமாகப் பரவும் கொரோனா காரணமாக ஐநா பொதுச் சபைத் தலைவர் இந்தியாவிற்கு வருவதை தற்போது ஒத்திவைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக சர்வதேச நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. மேலும் பல வெளிநாட்டுத் தலைவர்களும் பயணிகளும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதத்தில் இறுதியில் இந்தியாவிற்கு வருகை தர காத்திருந்த ஐநா பொது சபை தலைவர் வோல்கன் போஸ்கி தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது “இந்தியாவில் தற்போது கொரோனா அசாதாரணமாக பரவி வருகின்றது. இதனால் நான் என்னுடைய பயணத்தை தள்ளி வைக்கிறேன். ஆனால் பின்னர் ஒரு நாளில் நான் கண்டிப்பாக இந்தியாவிற்கு வருவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் அவர் இந்த மாத இறுதியில் வங்காளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்ததன் பேரில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.