அமெரிக்காவின் டெக்சாஸில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் உள்ள மேற்கு டெக்சாஸில் இருக்கும் மிட்லேண்ட் பகுதியில் ஒரு மர்ம நபர் தனது வாகனத்திலிருந்து கொண்டு அங்கிருந்த மக்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதன்பின் அந்த அந்த நபர் அங்கிருந்த தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்திச் சென்றார். இதையடுத்து விரைந்த போலீசார் அவரை வழியில் மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். பதிலுக்கு போலீஸ் தரப்பிலும் துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் இவருக்கு வயது 30 இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எந்த காரணத்துக்காக துப்பாக்கி சூடு செயலில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் சினெர்ஜி என்ற சினிமா தியேட்டரின் பார்க்கிங் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. சினிமாவில் நடப்பது போல இருந்தது என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். போலீசார் மேலும் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.