Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா 2-வது இடம்…. தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை எட்டியது… எச்சரிக்கை…!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் ஒரே நாளில் 839 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது.

உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில், மீண்டும் இரண்டு மடங்காக அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து அதிகளவில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நோய் தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதன் தாக்கம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  தகவல் அறிக்கையை  வெளியிட்டுள்ளது. அதில் நேற்று ஒரே நாளில் 1,52,545 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று மட்டும்  839 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,69,275 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 1,20,81,443 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 90,584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 11,08,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 14,12,047 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இவ்வாறு தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |