Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி… வீட்டில் முடங்கி கிடக்கும் மக்கள்…. வெறிச்சோடி காட்சியளிக்கும் சாலைகள்!

கொரோனா வைரஸ் தாக்குதலால் நியூயார்க் நகரில் பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி கிடக்கின்றது 

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா,  உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பயமுறுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. வல்லரசு  நாடான அமெரிக்காவும் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. இது தொடர்பாக பேசிய நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ, நியூ ரோசாலி (new rochelle) பகுதியில் 173 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  மேலும் கூறுகையில், இப்பகுதிக்கு தேசிய பாதுகாப்பு படைகள் வரவழைக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் இங்கு குடியிருப்பில் வசித்து வரும் மக்களுக்கு உணவு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

.

Categories

Tech |