Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெயில் ஓய்வா ….? குழப்பத்தில் ரசிகர்கள் …..!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ்அணியின்  அதிரடி ஆட்டக்காரர்  கிறிஸ் கெயில் ஓய்வு பெருகிறாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது .இதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது .இதனிடையே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் .அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல்  இந்த போட்டியில் ஓய்வு பெற்றுவிட்டாரா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது .

ஏனெனில் இப்போட்டியில் கிறிஸ் கெய்ல் 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .அப்போது அணியின் சக வீரர்கள் மற்றும் ரசிகர்களை நோக்கி சிரித்தபடி பேட்டை தூக்கி அனைவரிடமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .அதோடு சக வீரர்கள் கட்டியணைத்து கொண்ட அவர் தொடர்ந்து ரசிகர்களுக்கு தனது ஆட்டோகிராஃப் போட்டு வழங்கினார் .இவரின் செயல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது .அதோடு கிறிஸ் கெய்ல்  சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |