கேரளாவில் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் எப்படி அரசியல் கட்சிகளுக்குள் மோதல் ஏற்படுகின்றதோ அதே போல அங்குள்ள கல்லூரிகளில் இருக்கும் மாணவர் அமைப்புக்குள்ளும் மோதல் ஏற்படுவது வழக்கமான ஓன்று. அந்தவகையில் திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் B.A அரசியல் அறிவியல் 3_ஆம் ஆண்டு படித்து அகில் சந்திரன் என்ற மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள கல்லூரி மாணவர்கள் அமைப்புக்குள் ஏற்பட்ட மோதலில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. கத்தி குத்துப்பட்ட அகில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு , அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 3 மாணவர்களும் காயமடைந்தனர். மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் ஒன்றாக திரண்டு கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.