Categories
தேசிய செய்திகள்

இங்கிருந்து போங்க… ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்…. வேதனையில் மேற்குவங்க ஆளுநர்..!!

மேற்குவங்க மாநில ஆளுநரின் காரை மறித்து பல்கலைக்கழக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்கத்தா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, பாதுகாப்புப்படை வீரர்களுடன், பல்கலைக்கழகங்களின் வேந்தரான மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் வருகை புரிந்தார். ஆனால், அவரது காரை நுழைவு வாயிலில் மடக்கிய கொல்கத்தா பல்கலை கழக மாணவர்களில் ஒருபிரிவினர், கும்பலாக நின்று நிகழ்ச்சிக்கு வர விடாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

image

இதுகுறித்து மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப்  கூறுகையில், இந்த நிகழ்வு தமக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற, தர்மசங்கடமான நிகழ்வை இதற்கு முன் மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் எதிர்கொண்டுள்ளார். இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |