சச்சின் விமர்சனம் குறித்து டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதில் “சிறப்புரிமை பெற்ற மக்கள் உரிமைகளுக்காக அணிவகுக்கவோ போராடவோ மாட்டார்கள். அவர்களின் உலகம் பாதுகாப்பானது, சுத்தமானது மற்றும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே உருவாக்கப்பட்ட சட்டங்களினால் ஆளப்படுவது” என்ற எழுத்தாளர் ஜான் கிரிஷமின் வாசகம் அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இந்த பத்திரிக்கை விமர்சித்த இப்பதிவை பார்த்த நெட்டிசன்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் உனக்கென்னப்பா என்ற வசனத்தை குறிப்பிட்டு, நீங்களெல்லாம் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் நாங்கள் என்ன அப்படியா ஒரு வேளை சோற்றுக்காகவும், அடிப்படை வசதிக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் வலியும், வேதனையும், அத்தனை வசதிகளையும் சுலபமாகக் கிடைக்கும் உங்களுக்கு எப்படி தெரியும். என்ற கருத்துக்களை நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது சச்சின் தெரிவித்த கருத்தால் சச்சினின் ரசிகர்களே அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.