Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கண்டிப்பா வேலை கிடைக்கும்” மேலாளரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன மேலாளரிடமிருந்து மர்ம நபர் 1 1/2 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காலி பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உண்மை என்று நம்பிய சீனிவாசன் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதில் பேசிய மர்ம நபர் 1 லட்சத்து 53 ஆயிரத்து 500 ரூபாயை செலுத்தினால் வேலை கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய சீனிவாசன் அந்த நபர் கூறிய வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால் கூறியபடி அந்த நபர் வேலை வாங்கி தராததால் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |