Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம்…. வியாபாரி மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

மர்ம நபர்கள் வியாபாரியிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி சக்தி நகர் பகுதியில் தங்க நகை வியாபாரியான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கிலோ தங்கம் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் தொண்டாமுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென சண்முகத்தை வழிமறித்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியும், தாக்கியும் அவரிடம் இருந்த 7 1/2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 2 கிலோ தங்க நகைகளை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் மர்ம நபர்கள் சண்முகத்தை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |