வீட்டின் கதவை உடைத்து 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 8 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சோலை குடியிருப்பு சுந்தராபுரம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் தனது குடும்பத்தினருடன் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின் வீட்டிற்குள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் வடிவேல் உடனடியாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வடிவேல் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.