மளிகைக் கடையின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் அம்மன் கோவில் தெருவில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மளிகை கடைக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த பத்தாயிரம் ரூபாயை திருடியுள்ளனர்.
இதனையடுத்து பக்கத்தில் இருந்த அம்மன் கோவில் உண்டியலையும் உடைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் உண்டியலை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து பெருமாள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செம்பியம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.