Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தெரியாம நடந்துடுச்சு…! ”இனி ரொம்ப ஸ்ட்ரிக்ட்” அனுமதி கொடுங்க ப்ளீஸ் …!!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சமூக இடைவெளி கடைபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லி இருக்கக்கூடிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதே போல டாஸ்மார்க் மதுக்கடை என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆன்லைனில் மது விற்பனை செய்வது என்பது தற்போது சாத்தியமில்லாத ஒன்று என்றும் எனவே  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுக்கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை காலை இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேளைகளை தமிழக அரசு வழக்கறிஞர்களும் மும்முரமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு அன்றைய தினமே முக்கியமான தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின்  உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து மேற்கொண்டு வழக்கின் விசாரணையை நடத்தலாம் இல்லையென்றால் அன்றைய தினமே ஏதேனும் ஒரு முக்கியமான இறுதி தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கின்றது. வரும் காலத்தில் சமூக விலகல் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |