Categories
உலக செய்திகள்

உயிரிழந்து கிடந்த காவல்துறை அதிகாரி…. பிரேத பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!

இங்கிலாந்தில் மகனுடன் இறந்து கிடந்த துப்பறியும் காவல்துறை அதிகாரியின் மரணம் தொடர்பாக அவருடைய பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

இங்கிலாந்தில் துப்பறியும் காவல்துறை அதிகாரியான டேவிட் லவுடன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து டேவிட்டும் அவருடைய மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் சேர்ந்து விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா சென்றுள்ளார்கள். ஆனால் சுற்றுலாவில் இருந்து டேவிட்டும், அவருடைய மகனும் மட்டும் வீடு திரும்பியதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளார்கள்.

இதனையடுத்து டேவிட் லவுடன் தன்னுடைய 3 வயது மகனை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து வீட்டில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இதனையடுத்து பிரேத பரிசோதனையின் முடிவில் கிடைத்த இந்த உண்மை தகவலை காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளார்கள்.

Categories

Tech |