நடிகை வனிதா தனது திருமணம் தொடர்பான விமர்சனங்களுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. மேலும் முதல் மனைவி காவல் துறையினரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெறாத பீட்டரை வனிதா எப்படி திருமணம் செய்தார் என்று விமர்சித்துள்ளார். நடிகை குட்டி பத்மினியும் குறை கூறினார். இந்த விமர்சனங்களுக்கு நடிகை வனிதா டுவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் என்னை விமர்சித்து மகிழ்ச்சி அடைகின்றார்கள். முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். மற்றவரை துன்புறுத்துவதும், மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது சட்டத்திற்கு மாறானது. இணையதளத்தில் துன்புறுத்துவது ஒருவரின் வாழ்க்கையை மிகவும் பாதிக்கும். நீங்கள் கூறுவதை நான் கடுமையாக எடுத்துக்கொண்டால் மன அழுத்தத்தில் என்னையே துன்புறுத்தி இருக்கலாம். மேலும் அது உங்களை கொலைகாரர்கள் ஆக்கிவிடும். நான் உண்மையில் தவறு செய்திருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது. கடவுள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பதிலளித்தால் போதும் நான் தவறுகள் ஏதும் செய்யவில்லை” என்று வனிதா குறிப்பிட்டுள்ளார்.