திருமணமாகாத இளைஞர்கள் ஒன்றுகூடி பேனர்கள் வைத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆரம்ப கரம்பயம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு திருமணம் வரன் பார்க்க வருபவர்களிடம் சிலர் அவதூறு கூறி திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பல இளைஞர்களின் திருமணம் நடைபெறாமல் இருக்கின்றது. அதனால் இளைஞர்களின் பெற்றோர்களும் வேதனையில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட திருமணமாகாத சில இளைஞர்கள் ஒன்றுகூடி வேதனையை வெளிப்படுத்தும் விதமாக யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு பேனர் வைத்துள்ளனர்.
அதில் “கரம்பயத்தில் வந்து விசாரிக்கும் அனைத்து திருமண வரன்களையும் தடுத்து நிறுத்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி. இந்தப் பணியைச் செய்பவர்கள் சில ஆண்கள், சில பெண்கள் மற்றும் ஒரே ஒரு டீக்கடை வைத்திருப்போருக்கு மட்டுமே. இவர்களது நற்பணி மேலும் தொடர்ந்தால் இனி வைக்கப்படும் விளம்பர பேனர்கள் தங்களுடைய பெயர் புகைப்படம் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிடப்படும். இப்படிக்கு திருமணம் வரன் தேடும் இளைஞர்கள் கரம்பயம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.