Categories
சினிமா தமிழ் சினிமா

உண்மையா ?வதந்தியா?… விக்னேஷ் – நயன்தாரா ஜோடிக்கு அடுத்த மாதம் திருமணம்…!!!

காதல் ஜோடிகளாக வலம் வரும் நயன்தாராவும் ,விக்னேஷ் சிவனும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா . தற்போது இவர் அண்ணாத்த, நெற்றிக்கண் ,காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் மலையாளத்திலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார் . இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருகின்றனர் . ‘நானும்  ரவுடிதான்’ படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

Nayanthara to marry Vignesh Shivan only after visiting THIS temple? | Tamil  Movie News - Times of India

இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்துகொண்டே இருக்கும் . இந்நிலையில் அடுத்த மாதம் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்  திருமணம் நடைபெற இருப்பதாகவும் , இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளதாகவும்  வலைத்தளங்களில் தகவல் கசிந்து வருகிறது . இந்த தகவல் உண்மையா? அல்லது வழக்கம் போல இதுவும் வதந்தியா ?என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

Categories

Tech |