மற்றவர் உன்னை தாழ்வாக எண்ணினாலும் அல்லது பேசினாலும் உன்னை நீயே தாழ்வு படுத்திக் கொள்ளாது, அவர்களை உன்னோடு மௌனத்தான்வென்று காட்டு.
உனது மௌனமே உன்னை எதிர்ப்பவர்களை குழப்பும்.. அந்த குழப்பமே அவர்களை பலவீனப்படுத்தும்..!! உன் மௌனத்தில் இருந்தே வெற்றிக்கான சாதனைகளை சிறப்புடன் செய்தால்தான் உன் வெற்றி உன்னை பற்றி பேசும்..!! உன்னை தாழ்வாக பேசுவோரை எல்லாம் தோற்கடித்தப்படி உனது மௌனமும் வெற்றியும் உன் பக்கம் இருந்து அவர்களை தோற்கடிக்கும்… மற்றவர் உன்னைப் பற்றி கீழ்தனமாக பேசி மற்றவர் முன் கேலியும், கிண்டலும் செய்தாலும் உடனே உன் கோபத்தையோ, வேதனையோ வெளிப்படுத்தாதே.. “மௌனமாக” இரு அந்த மௌனமே அவர்களுக்கு முதலடி…!! உதாரணமாக சுவாமி விவேகானந்தர் வெளிநாடு சென்ற பின் அங்கு இருக்கும் சில வெள்ளைக்காரர்கள் அவரின் தோற்றத்தை பார்த்து கேலி செய்தார்கள். அந்த நேரத்தில் மௌனமாக இருந்தப்படி பொறுமை காத்தார் விவேகானந்தர் பின் மேடையில் பேச வாய்ப்பு ஒன்று கிடைத்தது.!!
அவர் தன் சாதனையை பற்றியும் அவரின் பெருமையை அவரின் பேச்சுத் திறமையைக் காட்டியது எந்த நபர்கள் கீழ்த்தனமாக பார்த்தார்களோ அவர்களை தலை குனிய வைத்தது பின் அவர்களே வந்து சுவாமிக்கு சேவை செய்ய வைத்தது. அவரின் திறமையான வெற்றி பேச்சி அதுவே அவருக்கு வெற்றி கனியை கொடுத்தது. அது போல உன் வெற்றின் மூலம் உனது எதிரிகளை வீழ்த்த முடியும் . ஒன்றை நினைவில் கொள் உனது பேச்சினலோ கோபத்தாலும் வேதனைனலோ அவர்களை தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் உனது உடனடி எதிர் செயல்கள் அவர்களை உற்சாகப்படுத்தும்..! நீ அந்த நேரத்தில் மௌனமாக இருந்தால் அவர்களின் குழப்பமடைய செய்யும்..!! உன்னை சீண்டி பார்த்த அவர்களுக்கு உனது “மௌனம்” ஏமாற்றத்தை தரும்… ஆகவே யார் எது பேசினாலும் எதிர் பேச்சு பேசாதே உன் பேச்சால் உன் பெருமையை சொல்ல முடியாது..
ஆனால் உனது வெற்றி உனது பெருமையைப் பேசும்..!! உன் வெற்றி உனது மகிமையை அனைவருக்கும் உணர்த்தும்… உனது தகுதி என்னவென்று சொல்லும்..! திறமையும் அறிவையும் யாது என அனைவருக்கும் உணர்த்தும்..! எனவே எப்போதுமே பொறுமையாக இருங்கள் இது எல்லாமே உன் மௌனத்தால் சாத்தியம்…!! நீ எதையும் கண்டுகொள்ளாமல் உன் வெற்றியை எட்டும் வரை யாருக்கும் தெரியாமல் கடின உழைப்பு கொடு.. தினமும் வெற்றிக்கான செயல்களை செய்..!! உன் நிதானத்தில் உன் எதிரிகளை குழப்பமடைய செய்..! உனது செயலில், உனது வெற்றியில் அவர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடு !! உன் மகிமை என்னவென்று உன் வெற்றியின் மூலம் அவர்களுக்கு காட்டு அதுவே உனது நிஜமான வெற்றி.