Categories
தேசிய செய்திகள்

“உன்னாவ் வழக்கு” குல்தீப் செங்கார்க்கு 19 ஆம் தேதி தண்டனை….. டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு….!!

உன்னாவ் சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக MLA  குல்தீப் செங்கார் தான் குற்றவாளி என டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் கடந்த வருடம் பாஜக MLA விடம் வேலை கேட்டு சென்ற இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பாஜகவின் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றத்தை நிரூபிப்பதற்காக பல மாதங்களாக வழக்கானது  நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்யவும் குல்திப் செங்கார் ஒரு முறை முயன்றுள்ளார். அதைத்தொடர்ந்து வழக்கின் சிக்கலை உணர்ந்து லக்னோ நீதிமன்றம் டெல்லியின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றிற்கு வழக்கை மாற்றி விட்டது. அதன்படி வழக்கை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் விசாரித்து வந்த டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் குல்தீப் செங்காரை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்து உள்ளது. மேலும் வருகின்ற 19ஆம் தேதி அன்று தண்டனை குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே பாஜக கட்சியில் இருந்து குல்தீப் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |