Categories
தேசிய செய்திகள்

”உன்னாவ் சிறுமி டிஸ்சார்ஜ்” 28-ஆம் தேதி அடுத்த விசாரணை….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப்  குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். உன்னாவ் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு உட்பட உன்னாவ் சிறுமி தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைத்தது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி தர்மேஷ் சர்மா ரைம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றார். இதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஓர் அறை தற்காலிக நீதிமன்றமாக மாற்றப்பட்டு , பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உன்னாவ் சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை அடுத்த கட்ட விசாரணை வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அவர் டெல்லியிலேயே தங்கியிருக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |