Categories
தேசிய செய்திகள்

உன்னோவ் வழக்கு : பாஜக MLA கட்சியில் இருந்து நீக்கம் ….!!

உன்னோவ் வழக்க்கில் தொடர்புடைய பாஜக MLA குல்தீப் சிங் செங்கார் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட  எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  கைது செய்யப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது.

உன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்

இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில்  இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர்  உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து  பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |