ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நடிகர் நகுல் தான் நடிக்கும் படத்தில் பாடலை ஒன்றை பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் நகுல். இவர் தற்போது ப்ரிஸ்லி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சதுஷன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நகுலின் ரசிகர்கள் பலரும் அவரிடம் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடச் சொல்லி கேட்டு கொண்டுள்ளனர். அதன்படி இசையின் மேல் ஆர்வம் கொண்ட நகுல் தற்போது நடித்து வரும் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்பதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.