Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

#Unsold : ரூட், ரூஸொவ் ஏமாற்றம்…. ஐபிஎல்லில் ஏலம் போகாத வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் மினி ஏலத்தில் சில முக்கிய வீரர்கள் ஏலம் போகாமல் உள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று 2:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கில் முக்கிய வீரர்கள் ஏலம் போயுள்ளனர். அதே நேரத்தில் ஏலம் போகாமலும் சில வீரர்கள் உள்ளனர்.

அதன்படி  ஆல்- ரவுண்டர்களில் முதல் வீரராக வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் ஏலத்தில் விடப்பட்டார். அவரது அடிப்படை விலை ரூ.1.50 கோடியாகநிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஷகிப் அல் ஹசனை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.  இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் கிறிஸ் ஜோர்டன் மீதும் எந்த அணியும் ஆர்வம் காட்டாததால் அவரும் ஏலம் போகவில்லை. இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் ஏலம் போகவில்லை. அதேபோல தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ரீலி ரூஸொவ் ஆகியோர் எந்த அணியாலும் ஏலத்தில் வாங்கப்படவில்லை.

ஏலம் போகாத வீரர்கள் :

ஷகிப் அல் ஹசன் – வங்கதேசம்

கிறிஸ் ஜோர்டன் – இங்கிலாந்து

ஜோ ரூட் – இங்கிலாந்து

ரீலி ரூஸொவ் – தென்னாப்பிரிக்கா

ஆடம் ஜாம்பா – ஆஸ்திரேலியா

குசால் மெண்டிஸ் – இலங்கை

டாம் பாண்டன் – இங்கிலாந்து

ஆடம் மில்னே – நியூசிலாந்து

அகேல் ஹொசின் – வெஸ்ட் இண்டீஸ்

ஷம்சி – தென்னாப்பிரிக்கா

முஜீப் உர் ரஹ்மான் – ஆப்கானிஸ்தான்

ரோஹன் குன்னும்மல் – இந்தியா

பிரியம் கார்க் – இந்தியா

ஷ்ரேயாஸ் கோபால் – இந்தியா

முருகன் அஸ்வின் – இந்தியா

Categories

Tech |