கொரோனா காரணமாக சுருளி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அளவில் விளங்கி வருகின்றது. இங்கு அனைத்து பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தடையை மீறி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவின்படி காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சுருளி அருவி சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை தொடரும் என அறிவித்துள்ளனர்.