கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் தமிழக முதல்வர் பங்கேற்ற ஆலோசனை கூடடம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் அமுலாக்கக்கூடிய வகையில் மார்ச் 31ஆம் தேதி வரை பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அங்கன்வாடி சத்துணவு குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான பருப்பு போன்ற உணவுப் பொருட்களாக வீடுகளிலேயே சென்று வழங்கவும். பொதுப் பொழுதுபோக்கு இடங்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள் , பொது தேர்வு நடக்கக்கூடிய 10,11,12 மாணவர்களை தவிர மற்ற கல்வி நிறுவனங்கள் , அனைத்தும் பள்ளி கல்லூரிகளும் மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும்.
அதிகமான கூட்டம் கூட கூடிய ஊர்வலங்கள் ,பொதுக்கூட்டங்கள், கோடைகால பயிற்சி வகுப்புகள், முகாம்கள் , மாநாடுகள் , கருத்தரங்குகள் , கண்காட்சிகள் , கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் போன்ற எந்த நிகழ்வுகளையும் மார்ச் 31ம் தேதி வரை நடத்தக் கூடாது.
மேலும் திருவிழாக்களில் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளும் குறைந்த அளவிலே மக்கள் பங்கேற்க வேண்டும். அனைத்து விளையாட்டு அரங்குகள் , கிளப்புகள் , டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்துமே மார்ச் 31-ஆம் தேதி வரை மூடியிருக்க வேண்டும்.
அதே போல புதிதாக திருமணம் செய்ய இனி மேல் அனுமதி கொடுக்க கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு , பேருந்து நிறுத்தத்திலும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படும். கொரோனா வைரஸ் குறித்த வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.