Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனா நோயாளிகள் குணமாகும் வரை…. எனது உதவிகள் தொடரும்…. பிரபல நடிகையின் நற்செயல் …!!!

கொரோனா நோயாளிகள் குணமாகும் வரை எனது உதவிகள் தொடரும் என்று பிரபல நடிகை ஹூமா குரோஷி கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

இதனால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த நடிகர், நடிகைகள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை ஹூமா குரேஷி டெல்லியில் 100 படுக்கை வசதிகள் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் அவர் வழங்கி வருகிறார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நோயாளிகளும் குணமாகும்வரை என் உதவிக்கள் தொடரும் என்று கூறியுள்ளார். நடிகை ஹூமா குரேஷியின் இந்த நற்செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Categories

Tech |