கூகுள் நிறுவனம் கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது.
இதுபற்றி ஆல்ஃபாபெட் என்ற கூகுளின் தாய் நிறுவனம், தங்கள் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ள தகவலில், “பணியாளர்கள் தங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விவரம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அதற்குரிய மருத்துவ ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
மேலும், மத அடிப்படையிலான விதிவிலக்கு கேட்க விரும்புபவர்கள் அதற்குரிய ஆவணங்களை சரியாக காண்பிக்க வேண்டும். இதுதவிர தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பணியாளர்களிடம், அதற்கான விளக்கம் கேட்கப்படும். வரும் ஜனவரி மாதம் 18ஆம் தேதிக்கு பின், தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை, என்றால் ஒரு மாதத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். அதன்பின்பு ஊதியம் வழங்கப்படாமல் விடுப்பு அளிக்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.