பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களின் தொலைபேசி எண்களை முடக்குவோம் என்று அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு, தற்போதும் பரவிக்கொண்டு தான் இருக்கிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், தற்போதைய சூழலில் உலக நாடுகள் தடுப்பூசிகளையே முழுமையாக நம்பியிருக்கிறது.
எனவே, ஒவ்வொரு நாடும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. தடுப்பூசி திட்டம் வந்தவுடன், பொதுமக்கள் தயங்கினர். எனினும், அதன் பின்பு கொரோனா அச்சம் காரணமாக மக்கள், அவர்களாகவே தடுப்பூசி செலுத்தத்தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு ஒரு படி மேலே சென்று, அனைத்து மக்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதிரடியாக அறிவித்துவிட்டது. அதாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுடைய தொலைபேசியின் எண்களை முடக்கவிடுவோம் என்று தெரிவித்துவிட்டது.