Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கடைகளுக்குள் அனுமதி இல்லை!”.. ஜெர்மன் மாகாணம் வெளியிட்ட அறிவிப்பு..!!

ஜெர்மன் நாட்டின் Hesse என்ற மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள்  அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு செல்வதற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டில் உள்ள Hesse என்ற மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாகாணத்தின் ஃப்ராங்பர்ட் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, தற்போது நாட்டில் இருக்கும் பல மாகாணங்களில் மதுபான விடுதிகள், இரவு நேர விடுதிகள், திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களுக்கு தடுப்பூசி  செலுத்தியவர்களும், கொரோனாவிலிருந்து மீண்டவர்களும் மட்டும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது Hesse மாகாணத்தின் அரசு, தடுப்பூசி செலுத்தாதவர்களை,  சில கடைகளில் அனுமதிக்க வேண்டாம் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருக்கிறது.

Categories

Tech |